Atal Setu Bridge Accident: அதிவேகத்தால் காத்திருந்த விபத்து; அதிஷ்டத்தால் தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ.!
வாகனங்களின் இயக்கம் என்பதும் மிதமான வேகத்தில் இருப்பது மட்டுமே நன்மையை தரும். அவசரம், அலட்சியம், அதீத நம்பிக்கை போன்றவை நொடியில் விபத்தை ஏற்படுத்திவிடும்.
ஜனவரி 22, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில், கடலுக்கு நடுவே 16.5 கி.மீ தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம், பிரதான போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவி செய்கிறது. இந்த பாலத்தில் பயணம் செய்து எளிதாக மும்பையில் இருந்து நவி மும்பையை சென்றடையலாம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இப்பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், பாலத்தில் பயணம் செய்த கார் ஒன்று அதிவேகமாக சென்று, சாலைத்தடுப்பில் மோதி உருண்டு விபத்திற்குள்ளானது. இது அடல் சேது பாலத்தில் ஏற்பட்ட முதல் விபத்தாக கருதப்படுகிறது. இந்த வீடியோ விபத்திற்குள்ளான காருக்கு பின்னால் வந்த மற்றொரு காரின் டேஷுகேமில் பதிவாகி இருக்கிறது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விபத்தில் லேசான காயத்துடன் பயணிகள் உயிர் தப்பினர். Zombie Virus Update: உலகளவில் பரவப்போகும் ஜாம்பி வைரஸ்.. புவி வெப்பமயமாதலால் அடுத்த சம்பவம்.!