BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார்.

PM Narendra Modi & Putin (Photo Credit: @ANI X)

அக்டோபர் 23, கசான் (World News): பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் அந்நாட்டின் கசான் (Kazan) நகரத்தில் அக்டோபர் 22, 23 நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும். இம்மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபர் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார். அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்தித்து, உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்யா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.!

ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement