அக்டோபர் 22, கசான் (World News): பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் அந்நாட்டின் கசான் (Kazan) நகரத்தில் இன்று மற்றும் நாளை (அக். 22, 23) நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும். SSGN Cruise Missile Nuclear Submarine: இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்.. ஏவுகணை சோதனை வெற்றி.!
இம்மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபர் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து கலந்துரையாட உள்ளனர். இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார். தற்போது கசானில் பிரதமர் நரேந்திர மோடி தரையிறங்கிவிட்டார்.
ரஷ்யா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி:
Prime Minister Narendra Modi lands in Kazan, Russia for BRICS Summit.
— News Arena India (@NewsArenaIndia) October 22, 2024