MiG 29 Crash: கண்காணிப்பு பணியின்போது பகீர்; மிக் 29 விமானம் விழுந்து நொறுங்கியது.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய விமானி.!
இரவுநேர கண்காணிப்பு பணியின்போது இராணுவ விமானம் விழுந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக விமானி உயிர்தப்பியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
செப்டம்பர் 03, ஜெய்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் (Jaipur), பர்மர் (Barmer Sector) செக்டர் பகுதியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 (IAF MiG 29) விமானம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. விமானமும் இரவு நேர கண்காணிப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. நல்வாய்ப்பாக விமானி விமானத்தில் இருந்து வெளியேறி உயிர்தப்பிக்கொண்டார். விமானம் அங்குள்ள பந்த்ரா பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விஷயம் குறித்து துறை ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது. Young Scientist Nunavath Ashwini Dead: மழையில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் விஞ்ஞானி..!
விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிசெய்த விமானப்படை:
விமானம் விழுந்து நொறுங்கியதன் களக்காட்சிகள்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)