President of India Wishes Team India: "இந்தியாவே கொண்டாடும் பெருமை" - இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு.!

கடினமான சூழ்நிலையிலும் விளையாடி வெற்றியை தனதாக்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டு, உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம் என திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

President of India Wish to Team India (Photo Credit: @rashtrapatibhvn / @Motabhai012 / @NextLvLMaxis X)

ஜூன் 30, புதுடெல்லி (New Delhi): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 World Cup 2024) போட்டியில், வெற்றிக்கனியை எட்டிப்பிடித்துல இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு (President  Draupadi Murmu) இந்திய கிரிக்கெட் அணிக்கு தெரிவித்துள்ள பாராட்டு எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிக்கிறேன். கடுமையான சூழ்நிலைகளின்போதும் தளராத மனதுடன் பயணம் செய்து, இப்போட்டியில் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இறுதிப்போட்டியில் கிடைத்துள்ளது அசாதாரண வெற்றி. உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்" என தெரிவித்துள்ளார். PM Modi Wish to Team India: வரலாற்றுசிறப்புமிக்க வெற்றி; டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய சிங்கங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement