Trending Video: கொடிமரத்தின் உச்சியில் சிக்கிக்கொண்ட தேசியக்கொடியை சரிசெய்த பறவை; வியக்க வைக்கும் வீடியோ வைரல்.!

78 வது சுதந்திர தினத்தில் கொடிமரத்தின் உச்சியில் சிக்கிக்கொண்ட தேசியக்கொடியை பறவை ஒன்று சரி செய்தது.

Bird Helps National Flag (Photo Credit: @ChekrishnaCk X)

ஆகஸ்ட் 17, திருவனந்தபுரம் (Kerala News): 15 ஆகஸ்ட் 2024ம் அன்று இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி, முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் மாநில வாரியான அணிவகுப்புகளை ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, 2047ல் இந்தியா வல்லரசாகும் என்ற உறுதியையும் அவரது அறிவிப்பு மூலம் உறுதி செய்தார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தேசியக்கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்படியாக, கேரளாவில் தேசியக்கொடியேற்றியபோது, கொடி கம்பத்தின் உச்சிப்பகுதிக்கு சென்று சிக்கிக்கொண்டது. அச்சமயம் எங்கோ இருந்து விரைந்து பறந்து வந்த பறவை ஒன்று, அதில் இருந்த முடிச்சை அவிழ்த்து பின் அங்கிருந்து பறந்து சென்றது. இந்த வியப்பூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Dog Show At Railway Stadium: 78வது சுதந்திர தின கொண்டாட்டம்.. ரயில்வே ஸ்டேடியத்தில் நாய் கண்காட்சி..!

இரண்டு கோணத்தில் எடுக்கப்பட்ட காணொளி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now