கணவனை ஆற்றில் தள்ளிவிட்ட மனைவி.. கொலை செய்ய முயன்றதாக கரையேறி கதறிய வீடியோ.!

ராய்ச்சூரில் கிருஷ்ணா நதிக்கு சுற்றுலா சென்றபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Raichur Wife Tries to Kill Husband (Photo Credit : @TeluguScribe X)

ஜூலை 13, கர்நாடகா (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம் கட்லூர் பகுதியில் வசித்து வருபவர் தாயப்பா. இவரது மனைவி சின்னி. தம்பதிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்கள் இருவரும் கிருஷ்ணா நதிக்கு சுற்றுலா சென்ற நிலையில், செல்பி எடுத்த போது மனைவி சின்னி திடீரென கணவரை ஆற்றல் தள்ளிவிட்டுள்ளார். தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடிய தாயப்பா, அக்கம் பக்கத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டார். அப்போது தனது மனைவி தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் தள்ளிவிட்டதாக கூறியவர், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு மன்றாடியுள்ளார். அதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Trending Video: இளம் ஜோடியை ஏரில் பூட்டி, பிரம்பால் அடித்து தண்டனை.. அத்தை மகனை மணந்ததால் கொடூரம்.! 

கணவரை உள்ளூர் மக்கள் மீட்ட வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement