Siddaramaiah about Hindutva: கொலை, வன்முறை, பாகுபாடுகளை ஊக்குவிக்கும் இந்துத்துவா - சித்தராமையா பரபரப்பு பேச்சு.!
இந்துத்துவா & மனுவாதம் ஆகியவை என்பது மக்களிடையே கொலை, வன்முறை போன்றவற்றை ஊக்குவிக்கிறது. ஜாதிய பாகுபாடுகளை ஆதரிக்கிறது. நான் இந்துவாக இருப்பினும் இந்துத்துவாவை எதிர்க்கிறேன். அதற்கு இவையே காரணம் என சித்தராமையா பேசினார்.
பிப்ரவரி 06,கலபுராகி: கர்நாடக மாநில (Karnataka Politician) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா (Siddaramaiah), அங்குள்ள கலபுராகி (Kalabhuragi) நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "இந்துத்துவா (Hindutva) என்பது அரசியலமைப்பிற்கு எதிரானது. இந்துத்துவமும் - இந்து தர்மமும் வேறு வேறு (Hindutva & Hindu Dharma). நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல. நான் ஒரு இந்து. ஆனால் மனுவாதத்தையும் இந்துத்துவாவையும் (Manuvad & Hindutva) எதிர்க்கிறேன். எந்த மதமும் (Religion) கொலை மற்றும் வன்முறையை ஆதரிக்கவில்லை. ஆனால், இந்துத்துவா மற்றும் மனுவாதங்கள் கொலை, வன்முறை மற்றும் பாகுபாட்டை ஆதரிக்கின்றன" என பேசினார். Mallikarjun Kharge on Adani issue: மத்திய அரசின் சாமர்த்திய செயல்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சி தலைவர்.. பரபரப்பு பேட்டி.!