Minor Girl Kidnap Attempt: பள்ளிக்கு சென்ற சிறுமியை நடுவழியில் கடத்த முயற்சி; சாமர்த்தியத்தால் தப்பிய மாணவி.. பதறவைக்கும் காட்சிகள்.!

பள்ளிக்கு கடைவீதி வழியே நடந்து சென்றுகொண்டு இருந்த சிறுமியை, இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபர் கடத்திச்செல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Kidnap Attempt: பள்ளிக்கு சென்ற சிறுமியை நடுவழியில் கடத்த முயற்சி; சாமர்த்தியத்தால் தப்பிய மாணவி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Kanpur Girl Kidnap Attempt (Photo Credit: @sirajnoorani X)

ஏப்ரல் 01, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், அவுரையா சத்தார் கோட்வாலி, திலக் நகர் ஜமால் ஷாஹ் பகுதியை சேர்ந்தவர் சலீம் கான். இவருக்கு அமன் கான், முஸ்கன் (10) என மகன், மகள் இருக்கின்றனர். சம்பவத்தன்று காலை 10:30 மணியளவில் முஸ்கன் (Kanpur School Girl Kidnap Attempt) பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம், வீதி ஒன்றில் சிறுமியை இடைமறித்த நபர், அவரை கடத்திச்செல்ல முற்பட்டுள்ளார். பதறிப்போன சிறுமி அலறியதால் மர்ம நபர் அவரை கைவிட்டார். இதனால் சிறுமி அங்கிருந்து ஓடிவந்து தப்பினார். இந்த விஷயம் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரியவரவே, அவர்கள் சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருக்கிறார். Sub Inspector Suicide: தேர்தல் கூடுதல் பணியால் சோகம்? விடுமுறை கிடைக்காமல் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement