Humanity Died: ரிக்ஸா ஓட்டுனரின் அலட்சியத்தால் நேர்ந்த விபத்து; வேடிக்கை பார்த்தபடி கடந்து சென்ற மக்கள்.! பதறவைக்கும் வீடியோ.!
சாலைகளில் அலட்சியமாக செயல்படும் நபர்களால், கவனத்துடன் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் சோகம் நடக்கிறது. அவர்களுக்கு மக்களும் உதவி செய்ய முன்வராமல் இருப்பது மரித்துப்போன மனிதத்தையே உறுதி செய்கிறது.
ஏப்ரல் 28, பிரயாக்ராஜ் (UttarPradesh News): கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில், அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நவீன் படேல் என்ற 53 வயது நபர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விபத்து வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மனிதம் மறுத்துவிட்டதாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில், இ-ரிக்சா ஓட்டுநர் பாலத்தில் எதிர்திசையில் அலட்சியமாக பயணிக்க, அவரின் வாகனத்தில் அவ்வழியே சரியாக சென்றுகொண்டு இருந்த இருசக்கர வாகன ஓட்டி மோதி விபத்தில் சிக்கினார். விபத்தை ஏற்படுத்திய ரிக்சா ஓட்டுநர், எவ்விதமான சலனமும் இன்றி விதியை மீறி வாகனத்தை இயக்கி சென்றார். இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவ்வழியாக சென்ற நபர்களும் இருசக்கர வாகன ஓட்டிக்கு உதவ முதலில் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Lorry Tractor Collision: டிராக்டரின் மீது மோதிய லாரி; 3 வயது சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.. தந்தையின் கண்முன் துயரம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)