Viral Video: இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
ஆந்திர பிரதேசத்தில் கடனை செலுத்த தவறிய 25 வயது இளம்பெண்ணை, மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜூன் 17, அமராவதி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 வயது சிரிஷா என்ற இளம்பெண், ரூ.80,000 கடனை முறையாக செலுத்த தவறியதால், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவர், அப்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, அவரது இரண்டு குழந்தையின் முன் பொது இடத்தில் அவமானப்படுத்தினார். அந்த வீடியோவில், அவர் அழுதவாறு கெஞ்சியுள்ளார். கணவரை இழந்த அப்பெண், தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கவும், ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்கவும் கடன் வாங்கியிருந்தார். இச்சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை கொலை செய்ய ரூ.2 லட்சம்.. இன்ஸ்டா காதலனுடன் மனைவி கொடூர செயல்..!
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)