
ஜூன் 17, அல்வார் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், அல்வார் (Alwar) மாவட்டத்தை சேர்ந்தவர் வீரு ஜாதவ். இவரது மனைவி அனிதா ராஜ், சமூக வலைதளத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அப்போது, காஷி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து, இவர்கள் இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். சம்பளம் போதாததால் இளம்பெண் விபரீத முடிவு.. கண்ணீரை தரும் தகவல்.!
கணவர் கொலை:
இதனையறிந்த அவரது கணவர், அவரை கண்டித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய இன்ஸ்டா காதலன் மற்றும் அவரது 4 நண்பர்களுக்கு ரூ. 2 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். கடந்த ஜூன் 8ஆம் தேதி இரவு காஷி தனது நண்பர்களுடன் வீருவின் வீட்டிற்குச் சென்று, தலையணையால் வாயை அழுத்தி அவரைக் கொன்றார். அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வீருவின் மகன் சத்தம் கேட்டு எழுந்தார். ஆனால், அனிதா அவரை வேறு அறைக்கு அனுப்பி அமைதியாக இருக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
3 பேர் கைது:
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, வீரு ஜாதவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில், கொலை (Murder) செய்யப்பட்டது உறுதியானது. மனைவி அனிதா ராஜ், நடந்தவற்றை கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதன்பின்னர் அனிதா மற்றும் அவரது காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.