Police Officer Enjoying With Drunken Man: குடிபோதையில் நடனமாடியதை விசில் அடித்து கொண்டாடிய காவல் அதிகாரி; வீடியோ வைரல்..!
ஆந்திர பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரி, குடிபோதையில் நடனமாடும் ஒருவருடன் சேர்ந்து விசில் அடித்து கொண்டாடி மகிழ்ந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ஜூலை 02, பிரகாசம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், அந்த கிராமத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் மதுபோதையுடன் இருந்துள்ளார். அவர் சாலையோரத்தில் அமர்ந்திருந்தபோது, அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் குடிபோதையில் (Drunken Man) நடனமாடுவதைக் கண்டு இவர் அதற்கு விசில் அடித்து, கைகளை அசைத்து நடனமாடி கொண்டாடி உள்ளார். Wife Arrested For Beating Husband: கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவி; தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய மனைவி, மாமியார் கைது..!
தன் கடமையை செய்யாமல் குடிபோதையில் நடனமாடுவதை ரசித்து தானும் விசிலடித்து கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு, துறை ரீதியான விசாரணை நடத்தி, கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் காவல்துறையின் ஒழுக்கத்தை மீறிய செயலாகவே காவல்துறை கருதுகின்றது. இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையின் ஒழுக்கம் குறித்து மக்கள் பல கேள்வி எழுப்புகின்றனர். பணியில் இருக்கும் போது சீருடை அணிந்துகொண்டு இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட காவல் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)