Chris Woakes: ஒற்றைக் கையுடன் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ்.. வெற்றிக்கு போராடிய இங்கிலாந்து..!

இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 10வது விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்ஸ் ஒற்றைக் கையுடன் களமிறங்கினார்.

Chris Woakes (Photo Credit: @cricbuzz X)

ஆகஸ்ட் 04, ஓவல் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 5வது டெஸ்ட் போட்டியில் 5ஆம் நாளில் இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்தியா அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியது. இங்கிலாந்து 9 விக்கெட்களை இழந்தது. வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி விக்கெட்டுக்கு இடது தோள்பட்டை காரணமாக அவதிபட்ட கிறிஸ் வோக்ஸ், இடது கையில் கட்டுப்போட்டுக் கொண்டு களமிறங்கினார். த்ரில் ஆன இப்போட்டியில் ஒற்றைக் கையுடன் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர். ENG Vs IND 5th Test, Day 2: இந்தியா 224 ரன்களுக்கு ஆல் அவுட்.. இங்கிலாந்து அதிரடி தொடக்கம்..!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement