Erode East By Poll Result 2023: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை.!

நான்கு முனை போட்டியாக களம்கண்ட ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஆளும் கட்சியான திமுக தனது படைகளுடன் களமிறங்கியதன் பலனாக வெற்றிப்பாதை நெருங்குவதாக திமுக - காங்கிரஸ் கூட்டணி தொண்டர்கள் பூரிக்கின்றனர்.

Congress E.V.K.S Elangovan Vote Erode East By Poll Visual (Photo Credit: PTI)

மார்ச் 02: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை (Erode East Constitution) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைந்ததை தொடர்நது, அத்தொகுதியில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் (Erode East By Poll) நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (E.V.K.S Elangovan), அதிமுக கூட்டணி (AIADMK Alliance) சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக (DMDK) சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் (NTK) சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக களமிறங்கினர். இந்த தேர்தலில் சுயேச்சை உட்பட 77 வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர். 15 சுற்றுகள் முடிவில் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார். தேர்தலில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. Tripura Elections Result 2023: திரிபுரா மாநிலத்தில் வெற்றி யாருக்கு?.. 30 தொகுதிகளில் முன்னணியில் பாஜக கூட்டணி..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement