Girl Child Dies: பள்ளி பேருந்தில் 4 வயது சிறுமிக்கு காத்திருந்த எமன்.. நொடியில் நடந்த சோகம்.. வேலூரில் சோகம்.!
Vellore LKG School Girl Keertisha Dies: பள்ளிக்குச் சென்று வந்த சிறுமி, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடந்துள்ளது.
நவம்பர் 06, குடியாத்தம் (Vellore News): வேலூர் மாவட்டம் குடியாத்தம், வரதாரெட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெய்சங்கர். இவருக்கு கீர்திஷா என்ற 4 வயதுடைய குழந்தை இருக்கிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, இன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி, பேருந்தில் இருந்து இறங்கி இருக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தின் சக்கரத்தில் சிக்கவே, சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பார்த்தபடி குடும்பத்தினர் கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. K. A. Sengottaiyan: 53 ஆண்டுகால அரசியல் பயணம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு சீவிய கே.ஏ. செங்கோட்டையன்? பரபரப்பு பேட்டி..!
மகளை இழந்த தவிப்பில் கதறிய உறவினர்கள்:
வீடியோ நன்றி: தந்தி தொலைக்காட்சி