Paralympics 2024: கோலாகலமாக இன்றுடன் நிறைவுபெறுகிறது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 2024: கூகுளின் அசத்தல் டூடுல்.!
செப்டம்பர் 08 ம் தேதியான இன்றுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான கொண்டாட்டம், ஒவ்வொரு நாடுகளில் அணிவகுப்புடன் நிறைவுபெறுகிறது.
செப்டம்பர் 08, பாரிஸ் (Paris): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் ஒலிம்பிக் (Olympics 2024) போட்டிகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, பாரா ஒலிம்பிக் போட்டிகள் (Para Olympics 2024) கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 08ம் தேதியான இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகளில் கலந்துகொண்ட வீரர்களில், நாடுகள் வாரியாக சீனா அதிக பதக்கத்தை வென்று முதல் இடத்தில் இருக்கிறது. சீனா 94 தங்கப்பதக்கம், 73 வெள்ளிப்பதக்கம், 49 வெண்கலப்பதக்கம் என 216 பதக்கம் பெற்று முன்னிலை வகிக்கிறது. பிரிட்டன் 47 தங்கப்பதக்கம், 42 வெள்ளிப்பதக்கம், 31 வெண்கலப்பதக்கம் என 120 பதக்கத்துடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கத்துடன் 16 வது இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெறும் நிறைவு விழாவில் இந்திய கொடி அணிவகுப்பை வீராங்கனை பிரீத்திபால் மேற்கொள்கிறார். Cristiano Ronaldo Records: வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ.. 900 கோல்கள் அடித்து அசத்தல்..!
கூகுள் நிறுவனத்தின் இன்றைய டூடுல்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)