Cristiano Ronaldo (Photo Credit: @larry_graphics_ X)

செப்டம்பர் 06, லண்டன் (Sports News): போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), இதுவரை கால்பந்து (Football) உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். கால்பந்து உலகில் அதிகமாகச் சம்பாதிக்கும் வீரர்களில் மிக முக்கியமானவர் தான் ரொனால்டோ. இவர் படைக்காத சாதனை, தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை மட்டும்தான். கிளப் போட்டிகளில் அனைத்து கோப்பையும் வென்று விட்டாலும், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் (Portuguese Footballer) அணி காலிறுதி வரை வந்துள்ளது. இதன் அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை. இந்நிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். Asian Table Tennis Championship 2024: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இந்திய அணி அறிவிப்பு.. சரத் கமல், மணிகா பத்ரா கேப்டன்..!

தற்போது, 2024 நேஷன்ஸ் லீக் (UEFA Nations League 2024) தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி மோதியது. இதில், போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், ரொனால்டோ தனது 900-வது கோல் அடித்து வரலாற்று சாதனை படைத்தார். இதன்மூலம், கால்பந்து உலகில் 900 கோல்கள் அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

900 கோல்கள் அடித்த முதல் வீரர்: