Indian Student Dies: 18 வயது இந்திய மாணவர் மயங்கி விழுந்து மரணம்.. தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்.!
துபாயில் தீபாவளி கொண்டாட்டத்தில் 18 வயது இந்திய மாணவர் வைஷ்ணவ் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
அக்டோபர் 24, துபாய் (World News): கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது குடும்பத்துடன் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் கிருஷ்ணகுமார் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பிபிஏ பயின்று வருகிறார். 18 வயதான இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசாவும் பெற்றுள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று துபாய் சர்வதேச கல்வி நகரில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் வைஷ்ணவ் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர் திடீரென மயங்கி விழவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Mosquitoes in Iceland: ஐஸ்லாந்தையும் விட்டுவைக்காத கொசுக்கள்.. பெருமையை இழந்த நாடு.. ஆய்வாளர்கள் ஷாக் தகவல்.!
தீபாவளி கொண்டாட்டத்தில் மரணம்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)