அக்டோபர் 23, ரெய்க்யவிக் (World News Tamil): குளுசிடே வகை பூச்சி இனங்களில் ஒன்றான கொசு, ரத்தத்தை குடித்து உயிர் வாழும். இது வனப்பகுதியில் விலங்குகளின் ரத்தத்தையும், குடியிருப்பு பகுதிகளில் மனிதர்களின் ரத்தத்தையும் குடித்து சந்ததியை பெருக்கி உயிர் வாழுகின்றன. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து பூமியில் வளர்த்து வரும் கொசுக்கள், அந்தந்த காலநிலைக்கேற்ப தனது தவகைமைப்பியும் பல ஆண்டுகளாக மாற்றி வருகின்றன. இதனிடையே, உலகில் 214 நாடுகள் இருந்தாலும், அதில் ஐஸ்லாந்து நாட்டின் காலநிலை காரணமாக அங்கு கொசுக்கள் வளரவோ பரவவோ வாய்ப்பில்லாமல் இருந்தது. இதனால் ஐரோப்பாவின் ஐஸ்லாந்து நாடு உலகிலேயே கொசுக்கள் இல்லாத நாடாக அறியப்பட்டது. Health Tips: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? காய்ச்சல் விட்டு ஓடணுமா? டிப்ஸ் உள்ளே.!
ஐஸ்லாந்து நாட்டில் கொசுக்கள் கண்டுபிடிப்பு (Mosquitoes in Iceland):
இந்நிலையில், ஐஸ்லாந்து நாட்டிலும் கொசுக்கள் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அண்டார்டிகா, ஐஸ்லாந்து பகுதிகளில் உறையும் வெப்பநிலை காரணமாக கொசுக்கள் இருந்ததில்லை. தற்போது மாறிவரும் காலநிலை காரணமாக ஐஸ்லாந்து பனி உருகும் நடைமுறையை எதிர்கொண்டு இருக்கிறது. இதனால் அங்கு உறைந்து கிடந்த பல பள்ளங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி இருக்கிறது. இவ்வாறான காலநிலை காரணமாகவும், கொசுக்களின் தகவமைப்பு மாற்றத்தினாலும் ஐஸ்லாந்து நாட்டிலும் கொசுக்கள் தென்பட தொடங்கியுள்ளன. கொசுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் விரைவில் ஆசியா மற்றும் எகிப்து நாடுகளில் காணப்படும் கொசு வகையும் தேசங்களை கடந்து ஐஸ்லாந்துக்குள் வரும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் கொசு சார்ந்த நோய் பாதிப்புகளை நினைத்து ஐஸ்லாந்து மக்கள் அச்சமடைந்து இருக்கின்றனர்.