Israel Palestine War: தாய்-தந்தை, உறவினர்களை இழந்து தனிமையில் வாடும் 17000 குழந்தைகள்; 5 மாத போரில் நடந்த சோகம்.!
5 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வரும் நிலையில், 17 ஆயிரம் குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 03, காசா (World News): இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த அக்.07, 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடங்கிய ஹமாஸ் (Israel - Palestine's Hamas War) முதலில் 1500 இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்தது. போரில் இஸ்ரேல் முழு அளவிலான பலத்துடன் இறங்கியதால், பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது வரை 26,637 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 16,000 க்கும் அதிகமான குழந்தைகளும் அடங்குவார்கள். பாலஸ்தீனத்தில் உள்ள மக்களுக்கு உலக நாடுகள் மனிதாபிமான மருத்துவ, அத்தியாவசிய பொருட்கள் உதவியை செய்து வருகிறது. ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பும் போரை நிறுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில், ய்ப்பூரினால் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய குழந்தைகள் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை முற்றிலுமாக இழந்து ஆதரவற்றவர்களாக மாறி இருக்கின்றனர். இவர்கள் ஐ.நா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்கிய 5 மாதத்திற்குள் இச்சோகம் நடந்துள்ளது. Chile Forest Fire: சிலியில் திடீர் காட்டுத்தீ; 10 பேர் பலி., 1000 வீடுகள் தீயில் நாசம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)