Khalistani Elements Controversial Action: இந்திய தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்; மாஸ் காண்பித்த இந்திய அதிகாரி.!
இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக முழங்குவதை போல, இங்கிலாந்தில் இந்திய தேசிய கொடியை அவமதிக்க முயன்ற காலிஸ்தானியர்களின் செயலை இந்திய அதிகாரிகள் முறியடித்தனர்.
மார்ச் 20, இலண்டன் (England News): பிரிட்டிஷ் (British Empire) ஆட்சியின் முடிவுக்கட்டத்தின் போது ஒருங்கிணைந்த இந்தியா அடுத்தடுத்த காலகட்டத்தில் இந்தியா (India), நேபாளம் (Nepal), வங்காளதேசம் (Bangladesh), பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தான் (Afghanistan), மியான்மர் (Myanmar) என பல நாடுகளாக பிரிக்கப்பட்டன. அப்போது, காலிஸ்தான் (Khalistan) என்ற நாடு தொடர்பான முழக்கமும் இருந்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் காலிஸ்தான் தொடர்பான சர்ச்சை அதிகரித்து, அந்த அமைப்பை சேர்ந்தோர் இந்தியாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டனில் (London) இருக்கும் இந்திய அலுவலகத்தில் ஏற்றியிருந்த கொடியை காலிஸ்தானிய ஆதரவாளர்கள் இறக்க முயற்சிக்க, இந்திய பாதுகாப்புப்படை அதிகாரி அவர்களிடம் இருந்து இந்திய கொடியை பத்திரமாக மீட்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Army Helicopter Crash: அதிகாரிகள் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து; 4 இராணுவ அதிகாரிகள் பரிதாப பலி.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)