Shocking Video: நடுரோட்டில் வைத்து மெக்சிகோ அதிபரை முத்தமிட முயன்ற போதை ஆசாமி.. அதிர்ச்சி சம்பவம்.!
மெக்சிகோ நாட்டின் அதிபரான கிளாடியா ஷெய்ன்பாமை நடுரோட்டில் வைத்து போதை ஆசாமி ஒருவர் முத்தமிட முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நவம்பர் 07, மெக்சிகோ (World News): மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்ஸிகோ சிட்டியில் உள்ள பொதுநிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் (Mexico Precident Claudia Sheinbaum) கலந்து கொண்டார். இவர் தலைநகரில் உள்ள உள்ளூர் வாசிகளை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து வந்த நபர் ஒருவர் அவரின் தோலின் மீது கையை வைத்து கட்டி பிடித்து முத்தமிட முயற்சித்துள்ளார். இதனால் பதறிப்போன அதிபர் உடனடியாக அவரிடம் இருந்து விலகி செல்லவே, அந்த நபரை பாதுகாப்பு குழுவினர் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிபருக்கே இந்த நிலை என்றால் நாட்டில் உள்ள பெண்களின் நிலை என்ன? ஆண்கள் தங்களது கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். பெண்களை பொருள் போல பாவிக்காமல் அவர்களும் சக மனிதர்கள் தான் என உணர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். Couple Engage in Sex at Waterfall: நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியலுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து வெளியிட்ட தம்பதி அதிரடி கைது.!
மெக்சிகோ நாட்டு அதிபரை முத்தமிட முயன்ற மதுபோதை ஆசாமி:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)