Hawaii Earthquake: ஹவாய் தீவுகளில் அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கம்; தலைநகர் வரை உலுக்கியதால் மக்கள் அச்சம்.!

எரிமலையால் உருவான தீவு ஹவாயில் இரண்டு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

Earthquake File Pic (Photo Credit: Twitter)

பிப்ரவரி 10, கோனொலுலு (World News): அமெரிக்காவில் உள்ள ஹவாய் (Hawaii Earthquake Today) தீவுகளில், இன்று 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை உணர்த்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. அதனைத்தொடர்ந்து, 30 நிமிட இடைவெளியில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, கோனொலுலு (Honolulu) வரை உணரப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை அமெரிக்க நில ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது. எரிமலை குழம்புகள் குளிர்ந்து எதிர்காலத்தில் நிலமாக உருவான ஹவாயில், இன்றளவும் எரிமலைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவ்வப்போது இதனால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவையும் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. Volcano Erupts in Iceland: ஐஸ்லாந்தில் வெடித்து சிதறும் எரிமலை; நரகத்தின் வாயில் போல பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.! 

ஹோனலுலு நகர் வரை உணரப்பட்ட நிலநடுக்கம்:

ஹவாய் தீவுகளில் நிலநடுக்கம்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement