Volcano Reykjanes Peninsula Erupts Today (Photo Credit: @RUVfrettir X)

பிப்ரவரி 10, ரெய்காவிக் (World News): ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து நாடு, இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் அழகை கொண்டதை போல நரகத்தின் வாயில் என அழைக்கப்படும் ஆபத்துகளை கொண்ட பகுதி ஆகும். வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து (Iceland), வட அமெரிக்கா - ஐரோப்பா இடையில் மத்திய அட்லாண்டிக் கடலில் அமைந்து இருக்கிறது.

எழில் கொஞ்சும் அழகுடன் ஐஸ்லாந்து: கிட்டத்தட்ட 4 இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து நாடு, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடமாகும். அங்குள்ள கண்கவர் மலைகள், இயற்கை அழகு, அழகிய நீர்வீழ்ச்சி, கடற்கரைகள், இரவுநேர வான் காந்த மையங்களின் காட்சி, குளிர்காலத்தில் உறைபனி என எப்போதும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையால் நாடு செழிப்புடன் இருக்கிறது. Lorry Bus Crash: லாரி - பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி, அப்பளம்போல நொறுங்கி பயங்கர விபத்து; 6 பேர் பலி., 15 பேர் படுகாயம்.! 

அழகில் ஆபத்தும் உண்டு: இவ்வுளவு அழகுக்கலை கொண்ட ஐஸ்லாந்தில் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பம் (Reykjanes Peninsula) எரிமலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வெடித்து சிதறி வருகிறது. அதேபோல, அங்கு ஏற்படும் அடுத்தடுத்த நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்புகளும் ஐஸ்லாந்தின் நிலைமையை கேள்விக்குறியாக்கி வருகிறது. ரெய்க்ஜேன்ஸ் எரிமலை சர்வதேச அளவில் கவனிக்கும் இடத்தில் இருக்கும் முக்கிய எரிமலை ஆகும்.

எரிமலைவெடிப்பு: தொடர்ந்து இந்த எரிமலை வெடித்துச்சிதறி, அதன் குழம்புகள் தரையில் ஊர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. பார்க்கவே நகரத்தின் வாயில் போல பதறவைக்கும் வகையில் இருக்கும் காட்சிகள் தற்போது பிரத்தியேகமாக சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் காட்சிகள் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டு இருக்கிறது.