Rahul Dravid, Infosys Narayana Murthy Casted Votes: இந்திய தேர்தல்கள் 2024: ஜனநாயக கடமையாற்றிய இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்..!

இந்த தேர்தலில் மக்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக தங்களின் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

Rahul Dravid | Infosys Narayana Murthy (Photo Credit: @IANS X @ANI X)

ஏப்ரல் 26, பெங்களூர் (Bangalore News): ஏழு கட்டமாக நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் 2024ல், முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட பல மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி நிறைவுபெற்றது. ஏப்ரல் 26ம் தேதியான இன்று (2024 General Elections) இந்திய தேர்தல்கள் 2024 நடைபெறுகிறது. காலை 07:00 மணி முதலாகவே மக்கள் திரளாக வந்து வாக்குச்சாவடி மையங்களில் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலில் 13 மாநிலங்களில் (Phase 2 Lok Shaba Elections 2024) இருக்கும் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. கேரளா (20), ராஜஸ்தான் (13), திரிபுரா (1), மணிப்பூர் (1), உத்திரபிரதேசம் (8), மகாராஷ்டிரா (8), மத்திய பிரதேசம் (7), அசாம் (5), பீகார் (5), மேற்குவங்கம் (3), சத்தீஸ்கர் (3), ஜம்மு காஷ்மீர் (1) ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 88 தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. Salem Businessman Death: சொத்துக்காக தந்தையை இரக்கமின்றி தாக்கிய மகன்; சேலம் தொழிலதிபர் மரணமடைந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.! பதறவைக்கும் காட்சிகள் லீக்.!

விறுவிறுப்பாக நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: இத்தேர்தலில் மொத்தமாக 1.67 இலட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,202 வேட்பாளர்கள் (1,098 ஆண் + 102 பெண்) மக்களிடம் தங்களின் வாக்குகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 8.08 கோடி ஆண் வாக்காளர்கள், 7.8 கோடி பெண் வாக்காளர்கள் என 15 கோடி வாக்காளர்கள் ஜனநாயக கடமையை செலுத்த பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3.28 கோடி வாக்காளர்கள் இளம் தலைமுறை ஆவார்கள். 34.8 இலட்சம் பேர் புதிதாக வாக்களிக்க இருக்கின்றனர்.

ராகுல் ட்ராவிட் (Rahul Dravid) & நாராயண மூர்த்தி (Infosys Narayana Murthy) வாக்களித்தனர்: இந்நிலையில், இன்று காலை கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட், மக்களவை தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தனது மனைவி சுதா மோர்த்தியுடன் பிஇஎஸ் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து தனது வாக்குகளை பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயண மூர்த்தி, "ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை, நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமையை நிறைவேற்றவும், எந்த கத்தி சார்ந்த வேட்பாளராக இருந்தாலும், அவர் ஆளுவதற்கு வாய்ப்பை வழங்கும் இன்னல் மகிழ்ச்சியான நாள். நாம் நமது சக்தியை உபயோகிக்கும் உற்சாகமான நாள்" என பேசினார்.

தேர்தல் முடிவுகள் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் ஒரேகட்டமாக ஜூன் 04ல் வெளியிடப்படும்.

இன்போசிஸ் நிறுவனர் சத்திய மூர்த்தி வாக்களிக்க வந்த காட்சிகள்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் வாக்களித்த பின் எடுக்கப்பட்ட காட்சிகள்: