IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது..? முழு விவரம் உள்ளே..!
2025 ஐபிஎல் தொடர் மெகா ஏலம் நடைபெறும் தேதி, இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 05, ரியாத் (Sports News): ஐபிஎல் 2025 (IPL 2025) தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 10 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 6, டெல்லி 4, ஆர்சிபி 3, பஞ்சாப் 2 என வீரர்களை தக்க வைத்துள்ளது. Imane Khelif: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இமானே கெலிஃப் பெண் அல்ல ஆண்.. மருத்துவ பரிசோதனையில் உறுதி..!
இதில், அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடியும், குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் மீதமுள்ளது. அதேபோல், பெங்களூருவிடம் ரூ.83 கோடியும், டெல்லியிடம் ரூ.73 கோடியும், லக்னோ மற்றும் குஜராத் அணியிடம் தலா ரூ.69 கோடியும், சென்னையிடம் ரூ.55 கோடியும், கொல்கத்தாவிடம் ரூ.51 கோடியும், மும்பை மற்றும் ஹைதராபாத்திடம் தலா ரூ.45 கோடியும் உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் 2025-யின் மெகா ஏலம் வருகின்ற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் (Riyadh) நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.