நவம்பர் 05, பாரிஸ் (Sports News): பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் மகளிர் பிரிவில் தங்கம் வென்ற இமானே கெலிஃப் (Imane Khelif), ஒரு ஆண் என்பதை மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் மகளிருக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியாவின் (Algeria) இமானே கெலிஃப் விளையாடிய ஆட்டத்தில், 46 நொடிகளில் ஏஞ்சலா கரினி வாக் அவுட் கொடுத்தார். அப்போது, இமானே கெலிஃப் பெண் அல்ல ஆண் என நடுவர்களிடம் ஏஞ்சலா கரினி தெரிவித்தார். இதனால் சர்ச்சை வெடித்தது. HBD Virat Kohli: 'கிங்' கோலிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து மழை..!
சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இமானே கெலிஃப்பை சோதனை அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தது. இருப்பினும், பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்காத காரணத்தினால், இமானே கெலிஃப் போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கமும் வென்றார். இந்நிலையில், மருத்துவர்கள் சௌமயா ஃபெடலா மற்றும் ஜாக்யூஸ் யங் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், இமானே கெலிஃபுக்கு 5-ஆல்ஃபா ரிடக்டேஸ் குறைபாடு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களிடையே காணப்படும் பாலியல் வளர்ச்சிக் கோளாறு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்குள் டெஸ்ட்டிக்கல்ஸ் (Testicles) உள்ளது.
மேலும், எக்ஸ்ஒய் குரோமோசோம்கள் (XY Chromosomes) இருப்பதும் உறுதியாகி உள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து இமானே கெலிஃப் வசம் உள்ள ஒலிம்பிக் பதக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என சமூக வலைதளத்தில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இமானே கெலிஃப் மருத்துவ அறிக்கை வெளியீடு:
🚨🇩🇿MEDICAL REPORT REVEALS ALGERIAN BOXER IMANE KHELIF HAS XY CHROMOSOMES
A leaked report has revealed that Algerian boxer Imane Khelif, who won gold at the Paris Olympics in women’s boxing, has XY chromosomes and internal testes.
The findings, linked to a rare sexual… pic.twitter.com/H3qCmCUyBD
— Mario Nawfal (@MarioNawfal) November 4, 2024