Sachin Wish to Team Afghanistan: பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்த சச்சின்.!
பேட்டிங், பௌலிங், ரன்களை குவித்தல் என அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என ஆப்கானிஸ்தானின் வெற்றியை சச்சின் பாராட்டினார்.
அக்டோபர் 24, சென்னை (Sports News): ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் (ICC Men's CWC World Cup 2023) தொடர் 2023-ன் 22வது ஆட்டம் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (Afghanistan Vs Pakistan) அணிகளுக்கு இடையே, சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் சார்பில் விளையாடிய அப்துல்லா 75 பந்துகளில் 58 ரன்னும், பாபர் அசாம் 92 பந்துகளில் 74 ரன்னும், ஷாகில் 34 பந்துகளில் 25 ரன்னும், கான் 38 பந்துகளில் 40 ரன்னும், அகமத் 27 பந்துகளில் 40 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர்.
ஆட்டத்தின் முடிவில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 282 ரன்கள் எடுத்திருந்தது. 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. Omni Bus Strike: ஆயுத பூஜைக்கு ஊருக்குச்சென்ற மகளுக்கு அதிர்ச்சி செய்தி; தனியார் ஆம்னி பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு.!
ஆப்கானிஸ்தான் சார்பில் விளையாடிய ரஹ்மானுல்லா 53 பந்துகளில் 65 ரன்னும், இப்ராஹிம் 113 பந்துகளில் 87 ரன்னும், ரஹ்மத் ஷா 84 பந்துகளில் 77 ரன்னும், சஹிடி 45 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். 49 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு ஆப்கானிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான அணியை எதிர்கொண்டு வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றி ஆப்கானிய அணியின் வீரர்களுடைய பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சினும் ஆப்கானிஸ்தான் அணிக்கு தனது பாராட்டுகளை எக்ஸ் (Twitter) பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ஆப்கானிஸ்தான் அணி இன்று சிறப்பாக விளையாடியது. உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி இவ்வாறாக விளையாடியது அவர்களின் தொடர் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.
பேட்டிங், பௌலிங், ரன்களை குவித்தல் என அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற பலம் வாய்ந்த அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியுள்ளது அவர்களின் உழைப்புக்கான வெற்றி. அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மைல் கல்" என்றும் தெரிவித்து இருந்தார். ஆப்கானிஸ்தானிலும் இவ்வெற்றி கொண்டாடப்பட்டது.