AFG Vs BAN 3rd ODI: குர்பாஸ், ஓமர்ஜாய் அதிரடி ஆட்டம்.. வங்கதேசத்திற்கு எதிரான தொடரை வென்று ஆப்கானிஸ்தான் அசத்தல்..!

சார்ஜாவில் நடைபெற்று வந்த ஒருநாள் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

AFG Vs BAN 3rd ODI (Photo Credit: @ACBofficials X)

நவம்பர் 12, சார்ஜா (Sports News): ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் (AFG Vs BAN) மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடர் முழுவதும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சார்ஜாவில் (Sharjah) நடைபெறுகிறது. முன்னதாக வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் வங்கதேசம் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. WI Vs ENG 2nd T20I: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம்.. இங்கிலாந்து அணி அபார வெற்றி..!

இந்நிலையில், மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மஹ்மதுல்லா (Mahmudullah) 98 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (Mehidy Hasan Miraz) 119 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் (Azmatullah Omarzai) 7 ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி 245 ரன்கள் என்ற இலக்கை துரத்தி விளையாடியது. துவக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) அபாரமாக ஆடி 120 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். அதில் 7 சிக்ஸ் மற்றும் 5 ஃபோர் அடித்து இருந்தார். மறுபுறம் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை 2-1 என வென்றது. ஆட்டநாயகன் விருதை அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் பெற்றார். தொடர் நாயகன் விருதை ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி (Mohammad Nabi) பெற்று சென்றார்.

குர்பாஸ், ஓமர்ஜாய் அபாரம்: