WI Vs ENG 2nd T20I (Photo Credit: @englandcricket X)

நவம்பர் 11, பார்படாஸ் (Sports News): வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி (WI Vs ENG) 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது டி20 போட்டி பார்படாஸ் (Barbados) மைதானத்தில் நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. SL Vs NZ 2nd T20I: 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி.. பெர்குஷன் அபார பந்துவீச்சு..!

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவல் (Rovman Powell) சற்று நிதானமாக விளையாடி 41 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 23 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd) 12 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்தனர். இதனையடுத்து, 159 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடியது. துவக்க வீரர் ஃபில் சால்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அடுத்து வில் ஜாக்ஸ் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் (Jos Buttler)இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். லியாம் லிவிங்ஸ்டன் 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 83 ரன்கள் அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஜோஸ் பட்லர் பெற்று சென்றார்.

ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம்: