USA Vs PAK: அமெரிக்கா-பாகிஸ்தான் போட்டியில் சாதித்த இந்தியன்.. இதை நீங்க கவனிச்சீங்களா?..!
நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா அணி, சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது.
ஜூன் 07, டல்லாஸ் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா-பாகிஸ்தான் (USA Vs PAK) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்களை இழந்து 159 ரன்களை அடித்தது. பின்னர், களமிறங்கிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 159 ரன்களை எடுத்து போட்டியை சமனில் முடித்தனர். இதனால், ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 6 பந்துகளில் 18 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு 19 ரன்களை இலக்காக வைத்தது. இறுதியில், அமெரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. World Food Safety Day 2024: "தரமான உணவு.. ஆரோக்கியமான வாழ்வு.." உலக உணவு பாதுகாப்பு தினம்..!
இந்த ஆட்டத்தில், அமெரிக்கா வெற்றிப்பெற மிக முக்கிய காரணமாக இருந்தவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சௌரப் நரேஷ் நெட்ரவால்கர். இவர், 14 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்தில் நடைப்பெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். அந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெட்ரவால்கர் அப்போது இந்திய அணிக்காக விளையாடினார்.
இன்று இந்திய அணிக்காக விளையாடிவரும் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ஜெய்தேவ் உனட்கட், சந்தீப் ஷர்மா, ஹர்ஷல் படேல் உள்ளிட்ட வீரர்களுடன் நெட்ரவால்கர் விளையாடியுள்ளார். இதே போட்டியில், சூப்பர் ஓவரில் அமெரிக்காவுக்காக களமிறங்கிய ஹர்மித் சிங், அதே U19 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிவர் ஆவார். இவ்விருவரும் நேற்றைய போட்டியில், தங்களது அணிக்கு சிறப்பாக பங்காற்றி வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர்.