50m Rifle 3Ps Team: 50 மீட்டர் அளவிலான துப்பாக்கிசுடும் போட்டியில் இந்தியா மாபெரும் சரித்திர சாதனை: அமெரிக்கா சாதனை முறியடிப்பு.!
50 மீட்டர் அளவிலான துப்பாக்கிசூடும் போட்டியில் இந்தியா அமெரிக்காவின் முந்தைய சாதனையை சீனாவில் முறியடித்து இருக்கிறது.
செப்டம்பர் 29, ஹாங்ஜூ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்ஜூ நகரில் ஆசிய விளையாட்டுப்போட்டிகள் 2022 (Asian Games 2022) நடைபெற்று வருகிறது. ஆசியாவில் உள்ள 10 நாடுகளை சேர்ந்த வீரர்கள், 39 பிரிவுகளாக நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.
இந்தியா தற்போது வரை பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி உட்பட பல பதக்கங்களை பெற்று இருக்கின்றன. தொடர்ந்து, பல விளையாட்டுகளில் இந்திய சிங்கங்கள் சாதனைகளை படைத்தது வருகிறது. இதனால் ஆசிய விளையாட்டுப்போட்டிகள் 2022 இந்தியாவுக்கு மிங்க்பெரிய வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ஐஸ்வரி பிரதாப் சிங்க் தோமர் (Aishwary Pratap Singh), ஸ்வப்னில் குஷால், அகில் ஷெரன் ஆகியோர் குழு 50 மீட்டர் அளவிலான Rifle 3P துப்பாக்கிசூடும் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். ICC World Cup 2023 All Squads: 13வது ஆடவர் உலகக்கோப்பை 2023 போட்டி: 10 அணிகளுக்கான வீரர்கள் யார்-யார்?.. முழு விபரம் உள்ளே.!
இவர்களில் ஐஸ்வரி & ஸ்வப்னில் 591 புள்ளிகளை பெற்ற நிலையில், இருவரும் முதல் இரண்டு இடத்தை தக்கவைத்துள்ளனர். அகில் 587 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.
ஐஸ்வரி, ஸ்வப்னில், அகில் பெற்றுள்ள புள்ளிகள் அமெரிக்காவின் முந்தைய சாதனையை விட கூடுதல் ஆகும். அமெரிக்கா கடந்த காலத்தில் 1761 புள்ளிகளை 50 மீட்டர் அளவிலான குழு துப்பாக்கிசூடுதல் போட்டியின் உச்சபட்ச சாதனையாக வைத்திருந்தது.
ஆனால், ஐஸ்வரி மற்றும் அவரின் குழு அதனைவிட கூடுதலாக 8 புள்ளிகள் பெற்று சாதனையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்று அப்புள்ளிகளை 1769 ஆக உயர்த்தி இருக்கின்றனர். இறுதிப்போட்டிக்கு ஐஸ்வரி, ஸ்வப்னில் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.