Grand Masters Chess Championship 2024: 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி.. உலக தரவரிசையில் முன்னேற்றம்..!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றுள்ளார்.

Arjun Erigaisi (Photo Credit: @mgd1_esports X)

நவம்பர் 08, கோட்டூர் (Sports News): தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌ சார்பில்‌ சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ நவம்பர்‌ 05ம் தேதி முதல் 11-ம்‌ தேதி வரை நடைபெறவுள்ள சென்னை கிராண்ட்‌ மாஸ்டர்ஸ்‌ செஸ்‌ சாம்பியன்ஷிப்‌ 2024 (Chennai Grand Master Chess Championship 2024) போட்டியினை இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ அதுல்ய மிஸ்ரா தொடங்கி வைத்தார். இப்போட்டியின்‌ மொத்த பரிசு தொகையான ரூ. 70 லட்சம்‌ தமிழ்நாடு அரசால்‌ வழங்கப்படவுள்ளது. ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ரிஷப் பண்ட் 6வது இடம்.. ரோஹித், கோலி பின்னடைவு..!

7 சுற்று கொண்ட இந்த போட்டியில் நேற்று 3-வது சுற்று நடந்தது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில், கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி (Arjun Erigaisi) 39-வது காய் நகர்த்தலில் அலெக்சி சாரனாவை (செர்பியா) தோற்கடித்தார். இதனால் உலக தரவரிசை லைவ் ரேட்டிங்கில் (2,805.8 புள்ளி) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,831 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார்.