Harmanpreet Kaur: சர்ச்சையில் சிக்கிய ஹர்மன்பிரீத் கவுர்; 3 புள்ளிகளை குறைத்து அதிரடி.. எதிர்வரும் போட்டிகளில் விளையாட தடை?.!
இதனால் அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் உச்சக்கட்ட கோபத்தில் இருந்த நிலையில், நடுவருக்கு எதிராக தனது கருத்துக்களை காரசாரமாக முன்வைத்தார்.
ஜூலை 23, புதுடெல்லி (Sports News): வங்கதேசத்தில் இந்தியா vs பங்களாதேஷ் பெண்கள் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் தலா ஒரு புள்ளிகள் பெற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வீராங்கனைகள் தங்களின் இலக்கை அடைய தவறினர்.
இதனால் அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் உச்சக்கட்ட கோபத்தில் இருந்த நிலையில், நடுவருக்கு எதிராக தனது கருத்துக்களை காரசாரமாக முன்வைத்தார். அதேபோல, விளையாட்டு மைதானத்தில் வைத்தே தனது கோபத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். வங்கதேச பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்து 225 ரன்களை 4 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்கள் முடிவில் எடுத்திருந்தது. Open AI Chat GPT: சாட் ஜிபிடி பிரியர்களுக்கு உற்சாக செய்தி; ஆண்ட்ராய்டு செல்போன்களில் அறிமுகம்.. விபரம் உள்ளே.!
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஒட்டுமொத்த விக்கெட்டையும் இழந்து 225 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. அணியை வழிநடத்தும் கேப்டனாக ப்ரீத் கவுர் நடந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் ஆதங்கம் சரியானதே எனினும், அதனை அப்பட்டமாக வெளிப்படுத்தியது தவறு என பலரும் சுட்டிக்காண்பிக்கின்றனர்.
ஒருசிலர் அவர் செய்தது சரியே எனவும் தங்களின் ஆதரவை வழங்குகின்றனர். இறுதியாக வங்கதேச அணியினர் புகைப்படம் எடுக்க வரும்போது, அணியின் கேப்டனை நோக்கி நீங்கள் மட்டும் எதற்காக தனியாக வந்தீர்கள், உங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்களையும் வரச்சொல்லுங்கள், அதுவே சரியாக இருக்கும் என பதிலடி கொடுத்தார். இவை அனைத்தும் சர்ச்சையாகின.
இந்த சர்ச்சையில் சிக்கிய ஹர்மன்பிரீத் கவுர்க்கு எதிராக 75% போட்டிக்கான செலவு, 3 புள்ளிகள் குறைப்பு ஆகிய நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்படுகிறது. 2 ஆண்டுகளுக்குள் 4 புள்ளிகள் குறைக்கப்பட்டால், அந்த வீரர் எதிர்வரும் 1 டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் / டி20 போட்டிகளை விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.