AUS Vs SL: இலங்கை அணியை அபாரமாக எதிர்கொண்டு, 2 தோல்விகளுக்கு பின் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது ஆஸ்திரேலியா.!
அக்.17 மதியம் 02:00 மணியளவில் நெதர்லாந்து - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
அக்டோபர் 17, லக்னோ (Sports News): 13வது ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 (ICC Cricket World Cup 2023) போட்டித்தொடர், இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா (India) தனி நாடாக முதல் முறையாக எடுத்து நடத்தும் உலகக்கோப்பை போட்டித்தொடர் இது என்பதால், பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் போட்டிகள் நடைபெறுகின்றன.
10 நாடுகள் கலந்துகொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் (Cricket) தொடரில், 50 ஓவர்கள் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் வெற்றிபெறும். புள்ளிப்பட்டியலின்படி இறுதியில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டு பின் உலகக்கோப்பையை அடையும்.
உலகக்கோப்பையை அடையும் அணிக்கு 4 இலட்சம் அமெரிக்க டாலர் பணம் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. நடப்பு சீசனில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை (Australia Vs SriLanka) அணிகளுக்கு இடையேயான 14வது போட்டித்தொடர் நடைபெற்றது.
இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இலங்கை (Team SriLanka) அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 43.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 209 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. மறுமுனையில் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி (Team Australia) களமிறங்கியது. Salaar Prithvi Look: மிரட்டலான பிரித்விராஜ் சுகுமாரனின் லுக்.. சலார் படத்தில் பதறவைக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பு.. போஸ்டர் வெளியீடு.!
ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் நிதானமாக அடித்து விளையாடியதை தொடர்ந்து, 35.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு அணி 215 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதனால் நடப்பு உலகக்கோப்பை சீசனில் 2 தோல்விகளை அடுத்தடுத்து எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது போட்டியில் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.
ஆஸி., அணி சார்பில் விளையாடிய வீரர்களில் மார்ஷ் 52 பந்துகளில் 51 ரன்னும், மார்னஸ் 60 பந்துகளில் 40 ரன்னும், ஜோஷ் 59 பந்துகளில் 58 ரன்னும், மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 31 ரன்னும், மார்கஸ் 10 பந்துகளில் 20 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர்.
இலங்கை அணியின் சார்பில் விளையாடியவர்களில் நிஷாங்கா 67 பந்துகளில் 61 ரன்னும், குஷால் 82 பந்துகளில் 78 ரன்னும், அசலங்கா 39 பந்துகளில் 25 ரன்னும் மட்டுமே அதிகபட்சமாக நடித்திருந்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அணியின் தோல்வி உறுதியானது.
இன்று மதியம் 02:00 மணியளவில் உலகக்கோப்பை போட்டியில் 15வது ஆட்டம் நெதர்லாந்து - தென்னாபிரிக்கா (Netherlands Vs South Africa) அணிகளுக்கு இடையே, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.