AUS Vs WI Test: உயிர்நாடியில் பந்து பட்டும் விடலையே.. காவெமுக்கு நேர்ந்த சோகம்., மின்னல் வேகத்தில் டார்விஸ்; ஆஸி., Vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் சம்பவம்.!

இரண்டு டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்ததால், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று சமன் செய்யவேண்டிய கட்டாயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி போராடி வருகிறது.

AUS Vs WI Test (Photo Credit: @cricketcomau X)

ஜனவரி 27, குயின்ஸ்லாந்து (Cricket News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் (AUS Vs WI Test Series) அடுத்தடுத்து மோதுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் ஜனவரி 25ஆம் தேதி முதல் தொடங்கி, அங்குள்ள குயின்ஸ்லாந்து மாகாணம் காபா (The Gabba Stadium, Queensland) மைதானத்தில் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 29ல் இப்போட்டி நிறைவுபெறுகிறது.

விறுவிறுப்புடன் நடைபெறும் ஆட்டம்: முதல் ஆட்டத்தில் விட்ட வெற்றியை மேற்கிந்திய தீவுகள் அணி எட்டிப்பிடிக்க தொடக்கத்தில் இருந்து போராடி வருகிறது. இதனால் ஆட்டம் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட் இழந்து 311 ரன்கள் சேர்த்தது. அதனைத்தொடர்ந்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 289 ரன்கள் எடுத்து தனது 9 விக்கெட் இழந்தது. இன்று இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி நடைபெற்ற நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 72.3 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பில் 193 ரன்கள் எடுத்தன. இதனையடுத்து, ஆஸ்திரேலியா அணி இன்னும் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடவுள்ளது. நாளை (ஜன.28) டெஸ்ட் தொடர் தொடர்ந்து நடைபெறும். Red Color Urine Reason: பீட்ரூட் சாப்பிட்ட பின் சிவந்த நிறத்தில் மலம் & சிறுநீர் வெளியேறுகிறதா?.. காரணம் என்ன?..! 

AUS Vs WI Test Kavem Injury | 27-10-2024 Match Visuals (Photo Credit: @cricketcomau X)

தோனிபோல மின்னல் செயல்பாடு: களத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்தபோது, காவெம் ஹோட்ஜ் (Kavem Hodge) தனது 74 ஆவது பந்தை எதிர் கொண்டார். அப்போது அவர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 74 பந்துகளில் 29 ரன்கள் அடித்த அவர், டார்விஸ் ஹெட்டின் (Travis Head) அதிரடி செயல்பாட்டினால் விக்கெட் இழந்தார். நாதன் லியான் தனது பந்துகளை வீச, அதனை எதிர்கொண்ட காவெம், ரன் எடுக்கும் முனைப்புடன் செயல்பட்டார். ஆனால், சிலிப்பரில் இருந்த டார்விஸின் கைகளில் பந்து சிக்கிக்கொள்ள, தோனிபோல நொடியில் சுதாரித்து ரன் அவுட் எடுக்கவைத்தார். இதுகுறித்த காணொளி உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காவெம் தனது 70 வது பந்தை எதிர்கொள்ளும்போது, அது எதிர்பாராத விதமாக அவரின் உயிர்நாடியில் தாக்கியது. நல்ல வேலையாக பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. உடற்தகுதி சோதனைக்கு பின்னர் அவர் நாளை போட்டியில் விளையாடலாம் அல்லது விடுப்பில் அனுப்பி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டார்விஸ் விக்கெட் எடுத்த காணொளி:

காவெம் காயமடைந்த காணொளி: