AUS Vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நவம்பர் 04, மெல்போர்ன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தான் அணிக்கு முழு நேர கேப்டனாக முஹமது ரிஸ்வான் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி ஆகும். மெல்போர்னில் (Melbourne) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா (AUS Vs PAK 1st ODI) அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. Wriddhiman Saha: "போய்வரவா"..., கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - விருத்திமான் சாகா அறிவிப்பு.!
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) 44 ரன்களும் இறுதியில் நசீம் ஷா (Naseem Shah) 40 ரன்களும், பாபர் அசாம் (Babar Azam) 32 ரன்களிலும் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் மேத்தீவ் ஷாட் 1, ஜெக் பிரேசர் 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்நிலையில், 3வது விக்கெட்டுக்கு ஸ்மித் மற்றும் ஜாஸ் இங்கிலீஷ் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மித் 44 ரன்களிலும், ஜோஸ் இங்கிலீஷ் 49 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
பின் வந்த மார்னெஸ் லாபஸ்சேன் 16 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 10 ரன்களிலும், மேக்ஸ்வெல் டக் அவுட்டாகியும் வெளியேற ஆஸ்திரேலிய அணி தோல்வியை நோக்கி சென்றது. இருப்பினும், கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins), நிலைத்து நின்று அபாரமாக விளையாடி 31 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் ஹரிஷ் ராப் 3 விக்கெட்டுகளும், ஷாகின் சா அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். ஆட்டநாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) பெற்று சென்றார்.
மிட்செல் ஸ்டார்க் அபாரம்: