Wriddhiman Saha (Photo Credit: @Wriddhipops X)

நவம்பர் 04, கொல்கத்தா (Sports News): மேற்குவங்கம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர், பேட்ஸ்மேன் விருத்திமான் சாகா (Wriddhiman Saha), இந்தியாவில் தேசிய அளவில் முதல் தரநிலை விக்கெட் கீப்பர் ஆவார். சிறந்த விக்கெட் கீப்பராகவும், ஐபிஎல் தொடரில் இந்திய பிரீமியர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் உட்பட பல அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் தொடரில் முதல் சதம் அடித்த வீரராகவும் இருந்து வருகிறார். West Indies Squad For WI Vs ENG: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!

19 வயதில் தொடங்கிய ஆட்டம்:

கடந்த 2010 முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் சாகா, கரீபிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி, 3 வது தொடரில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். 22 வயதுக்குட்பட்ட அணிக்காக 19 வயதில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கியவர், ராஞ்சி டிராபி வாயிலாக ஒருநாள் போட்டிக்கும் பரிட்சயமானார்.

ஓய்வு பெறுவதாக அறிவிப்பு:

தற்போது வரை மொத்தமாக 40 டெஸ்ட், 9 ஓடிஐ, 120 எப்.சி 20-20 ஆட்டங்கள் என பல்வேறு பிரிவுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு அசத்தி இருக்கிறார். இந்நிலையில், அவர் தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக சாகா பதிவு செய்துள்ள எக்ஸ் பதிவில், "கிரிக்கெட் வாழ்க்கையில் நேசத்துக்குரிய பயணத்திற்குப் பின், இந்த சீசன் எனது கடைசி சீசன் ஆகும். கடைசியாக ஒரு முறை வங்காளத்தை ரஞ்சி கோப்பையில் விளையாடி பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். இந்த பருவத்தை நினைவில் வைக்கலாம்!" என தெரிவித்துள்ளார். 40 வயதில் சாகா தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

சாகா தனது ஓய்வு குறித்து வெளியிட்ட அறிவிப்பு: