David Warner Retirement: 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார் டேவிட் வார்னர்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தான் விளையாடிய வரை போதும், இளம் வீரர்களும் அணிக்கு வலு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
ஜனவரி 01, சிட்னி (Sports News): ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரரான டேவிட் வார்னர் (David Warner), அந்த அணியை கேப்டனாகவும் கடந்த காலங்களில் வழிநடத்தி இருக்கிறார். பல சர்வதேச அளவிலான போட்டிகளில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அவர், இடது கை பேட்டிங்கில் வல்லவர் ஆவார். அதேபோல, வலது கை பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுபவார்.
அதிரடி ஆட்டக்காரர்: முந்தைய காலங்களில் ஆஸ்திரேலியாவில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்து வந்த வார்னர், தனது அணிக்காக அதிரடியாக ரன்கள் குவித்த நாயகர்களில் கவனிக்கத்தக்கவர் ஆவார். கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கிய அவரின் கிரிக்கெட் வாழ்க்கை, தற்போது வரை தொடர்ந்து வருகிறது. தனது 13 வயதில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை தொடர்ந்து, அதனுள் தன்னை முழு ஈடுபாடுடன் செயல்படுத்திய வார்னர் இன்று நாடுகள் கடந்து பலராலும் ரசிக்கப்படும் வீரராகவும் இருந்து வருகிறார். Maha Aradhana at Tiruttani: திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டையொட்டி மகா ஆராதனா; பக்தர்கள் திரளாக வழிபாடு.!
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி20 தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த வார்னர், தற்போது 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, தனது 37 வயதில் இந்த ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த உலகக் கோப்பை போட்டியின் போது, வார்னர் அதிக ரன்களை தனது அணிக்காக சேர்த்திருந்தார்.
ரன்கள் குவிப்பு: 159 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 6,938 ரன்கள் குவித்துள்ளார். இதில் 22 சதங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. டேவிட் வார்னரின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க அவர் எடுத்துள்ள முயற்சி பாராட்டுகளை பெற்று வருகிறது.