Special Maha Aradhana at Tiruttani (Photo Credit: @ANI X)

ஜனவரி 01, திருத்தணி (Tiruttani): ஆங்கில புத்தாண்டு 2024 கொண்டாட்டங்களுடன் மக்களால் வரவேற்கப்பட்டது. இந்த நன்னாளில் ஆன்மீக பக்தர்கள் பலரும் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்களுக்கு செல்வது வழக்கம். ஒரு சிலர் தாங்கள் விரும்பிய இஷ்ட தெய்வங்களின் கோயிலுக்கு தொலைதூரப் பயணங்களை மேற்கொண்டும் இருப்பார்கள்.

ஆன்மீக பக்தர்கள்: அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் அமையப்பெற்றுள்ள திருத்தணி முருகன் (Tiruttani Arulmigu Subramanyaswamy Temple) மலைக்கோவிலுக்கு, பக்தர்கள் அதிக அளவில் புத்தாண்டை ஒட்டி வருவது வழக்கம். இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கு நேற்று இரவு முதல் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. New Year 2024 Sun Rise: களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்: ஆண்டின் முதல் சூரிய உதயம்.. அட்டகாசமான காணொளிகள் இதோ.! 

திருத்தணி முருகன் கோவில்: புத்தாண்டு நிகழ்வையொட்டி கோவில் விடியவிடிய திறந்திருக்கும் என்பதால், சுவாமி தரிசனம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். அந்த வகையில், திருத்தணி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதாக கோவிலை அடைய, கோவில் நிர்வாகம் சார்பில் 365 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டில் முருகப்பெருமான் காலை 10 மணிக்கு தனது மயில் வாகனத்தை தேர்வில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அரோகரா கோஷமும், பஜனையும்: இதனை முன்னிட்டு முருக பக்தர்கள் பலரும் அங்கு குவிந்து பஜனைகள் பாடி வழிபாடு செய்து வருகின்றனர். லட்சக்கணக்கில் வரும் பக்தர்களை ஒருங்கிணைத்து, அனைவரின் தரிசனத்திற்கும் வழிவகை செய்ய காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மகா ஆராதனா நிகழ்வு: நேரில் செல்ல முடியாத பக்தர்கள், தற்போதைய தொழில்நுட்பத்தில் வீட்டிலிருந்து வர அதனை கண்டு மகிழும் வகையில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா ஆராதனா நிகழ்வு நடைபெற்றதன் காணொளி உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.