IND Vs BAN Test: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவு; கில் - பண்ட் அபார சதம்.. வங்கதேச அணி வெற்றிக்கு 357 ரன்கள் தேவை..!

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகிறது.

IND Vs BAN 1st Test, Day 3 (Photo Credit: @sports_tak X)

செப்டம்பர் 21, சென்னை (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில், முதல் டெஸ்ட் போட்டி (IND Vs BAN 1st Test, Day 3) செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலை வகித்தது. இந்நிலையில், இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. IND Vs BAN Test: 3-ஆம் நாள் உணவு இடைவேளை; இந்தியா 432 ரன்கள் முன்னிலை.. கில் - பண்ட் அதிரடி ஆட்டம்..!

இந்திய வீரர்கள் சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் ரிஷப் பண்ட் (Rishabh Pant) ஜோடி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி பின் அதிரடியாக சதமடித்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி 64 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. கில் 119 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர், 515 ரன்கள் இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற வங்கதேச அணி சற்று தடுமாறியது.

இதனையடுத்து, கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ (Najmul Hossain Shanto) அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இவரது பொறுப்பான ஆட்டத்தினால், 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 37.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது. சாண்டோ 51 ரன்களுடனும், சாகிப் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்கள், பும்ரா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், வங்கதேச அணி வெற்றிக்கு 357 ரன்கள் தேவைப்படுகிறது.

ஜெய்ஸ்வால் அபாரமான ஃபீல்டிங்: