IND Vs BAN T20I: வங்கதேசத்திற்கு எதிரான 3 டி20 போட்டிகள்; இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ.. விபரம் உள்ளே.!

இந்தியா - வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் போட்டி அப்டேட்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Suryakumar Yadav | BCCI Logo (Photo Credit: @BCCI X)

செப்டம்பர் 29, புதுடெல்லி (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் (IND Vs BAN) டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் தொடர் சென்னையில் வைத்து நடைபெற்ற நிலையில், அதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் வைத்து நடைபெற்று வரும் நிலையில், அங்கு மழை காரணமாக போட்டி தொடர்ந்து தள்ளிப்போகிறது. முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்டது. மூன்றாவது நாலாவது ஆட்டம் நடைபெறுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. IND Vs BAN Test: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவு.. ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு.., வங்கதேச அணி தடுமாற்றம்..! 

டி20 போட்டிகள் விபரம்:

இந்த ஆட்டங்களுக்கு பின் மூன்று டி20 (IND Vs BAN T20I) ஆட்டங்களும் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. வரும் அக்டோபர் ஆறாம் தேதி முதல் டி20 தொடர் குவாலியரிலும், அக்டோபர் ஒன்பதாம் தேதி இரண்டாவது டி20 தொடர் புதுடெல்லியிலும், அக்டோபர் 12ஆம் தேதி மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி ஹைதராபாத்திலும் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஆவலுடன் காண ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களும், இந்திய அணியின் வெற்றிக்காக கடுமையாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

டி20 போட்டிகளுக்கான இந்திய (Team India Squad for IND Vs BAN T20i Series 2024) அணி:

இந்நிலையில், பிசிசிஐ 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அதன்படி, சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) டி20 போட்டிக்கான அணியை வழி நடத்துகிறார். அந்த அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டி20 இந்திய அணி அறிவிப்பு:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif