IND Vs BAN 2nd Test, Day 1 (Photo Credit: @YadavAjay_up62 X)

செப்டம்பர் 27, கான்பூர் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா - வங்கதேச (IND Vs BAN 2nd Test, Day 1) அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (செப்டம்பர் 27) கான்பூரில் (Kanpur) உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். Dwayne Bravo Retirement: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த சாம்பியன் பிராவோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இதனையடுத்து, வங்கதேச அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் சாகிர் ஹசன்-இஸ்லாம் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே தடுமாறிய சாகிர் ஹசன் 24 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த இஸ்லாம் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ (Najmul Hossain Shanto) 31 ரன்களில் அவுட்டானார்.

இதனிடையே மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் அடித்தது. மோமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஸ்பிகிர் ரகிம் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் (Akash Deep) 2 விக்கெட்கள், அஸ்வின் (Ravichandran Ashwin) 1 விக்கெட்களை வீழ்த்தினர்.