CSK Vs LSG: சென்னை மைதானத்தை அதிரவிட்ட சி.எஸ்.கே அணி.. சொந்த மண்ணில் அசத்தல் வெற்றி.!
போட்டியை விறுவிறுப்புடன் தொடங்க தொடர்ந்து படியுங்கள்..
ஏப்ரல் 03, சென்னை (Cricket News): ஐ.பி.எல் 2023 (IPL 2023) சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Chennai Super Kings Vs Lucknow Super Giants) அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது.
CSK Bating: போட்டியின் தொடக்கத்தில் நின்று விளையாடிய தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், டி. கான்வே ஆகியோர் அணியின் ரன்களை உயர்த்த உதவி செய்தனர். கெய்க்வாட் 9.1வது ஓவரில் 31 பந்துகளில் 57 ரன்னும், கான்வே 10.2வது ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்னும் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினர். அதனைத்தொடர்ந்து விளையாடிய சிவம் டியூப் - மொயீன் அலி ஜோடியில், சிவம் 13.5வது ஓவரில் 16 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். மொயீன் அலி 15.2வது ஓவரில் 13 பந்துகளில் 19 ரன்கள் அடித்து வெளியேறினார். RPF SI Sexual Assault: இளம்பெண்ணை பின்தொடர்ந்து சில்மிஷம் செய்த இரயில்வே எஸ்.ஐ.. பணியிடைநீக்கம் செய்த உதவி ஆணையர்; விசாரணையில் அதிர்ச்சி..!
பின் பென் ஸ்டோக்ஸ் - அம்பத்தி ராயுடு ஜோடியில் பென் ஸ்டோக்ஸ் 16.6வது ஓவரில் 8 பந்துகளில் 8 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா 19.1வது ஓவரில் 6 பந்துகளில் 3 ரன்கள் அடித்து வெளியேறினார். ஆட்டத்தின் இறுதியில் 19வது ஓவருக்கு பின் களமிறங்கிய தோனி 19.4 வது ஓவரில் 3 பந்துகளில் 2 சிக்ஸ் என 12 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதி வரை நின்று ஆடிய அப்பத்தி ராயுடு 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். சான்ட்நெர் 1 பந்துகளில் 1 ரன்களை எடுத்தார்.
LSG Bowling: இதனால் ஆட்டத்தின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்திருந்தனர். 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியினர் களமிறங்கியுள்ளனர். இதில், பந்துவீச்சை பொறுத்தமட்டில் லக்னோ அணியின் சார்பில் பந்துவீசிய எம். வுட் 4 ஓவருக்கு 49 ரன்கள் அடிக்கவிட்டு 3 விக்கெட்டை கைப்பற்றினார். ஆர். பிஷ்ணோய் 4 ஓவரில் 28 ரன்கள் அடிக்கவிட்டு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
LSG Bating: 218 ரன்கள் என்ற இலக்குடன் இருந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் - கே. மேயர்ஸ் ஜோடி களமிறங்கியது. இதில் கே. மேயர்ஸ் 5.3 வது ஓவரில் 22 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய டி. ஹூடா 6.6 ஓவரில் 6 பந்துகளில் 2 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். நின்று ஆடிய கே.எல் ராகுல் 7.2வது ஓவரில் 18 பந்துகளில் 20 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். பின் களமிறங்கிய கே. பாண்டியா - எம்.ஸ்டோனிஸ் ஜோடியில் பாண்டியா 9.6வது ஓவரில் 9 பந்துக்கு 9 ரன்கள் அடித்து அவுட்டானார். Santhanam Vadakkupatti Ramasamy: 63 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த சந்தானத்தின் வடக்குப்பட்டி இராமசாமி படக்குழு.. இயக்குனர் அறிவிப்பு.!
பின், எம்.ஸ்டோனிஸ் 13.2வது ஓவரில் 18 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். இதனால் 15 ஓவரின் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. களத்தில் என். பூரான் - ஏ. படோனி ஜோடி இருந்தது. இதில் பூரான் நின்று ஆடியதால் அணியின் ரன்னும் உயர்ந்துகொண்டு சென்றது. ஆனால், என். பூரான் 15.6வது ஓவரில் 18 பந்துகளில் 32 ரன்கள் அடித்தவர் கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கிய படோனி - கவுதம் ஜோடி நின்று விளையாடியதால் அணியின் இலக்கு கேள்விக்குறியானது.
Turning Point of Match: இருவரில் படோனி 19 வது ஓவரில் 14 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் நடித்திருந்தார். கெளதம் 10 பந்துகளில் 17 ரன்களை எடுத்திருந்தார். அணி மொத்தமாக 190 ரன்களை எடுத்திருந்த நிலையில், 6 பந்துகளில் 28 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இதனால் லக்னோ அணி வெற்றி அடையுமா? என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்தது. அதேபோல, சென்னை ரசிகர்களுக்கும் அணி பந்துவீச்சில் இறுதி நேரத்தில் குளறுபடி செய்துவிடுமா? என்ற சந்தேகமும் வலுத்தது.
இறுதி ஓவரில் தேஷ்பாண்டே வீசிய பந்துகள் பதற்றத்தால் அடுத்தடுத்து வைடுகளை சென்று ரன்களும் எதிரணிக்கு உயர தொடங்கியது. இருப்பினும் ஆட்டத்தின் முடிவில் களத்தில் இருந்த படோனி 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து 19.3 ஓவரில் ஆட்டம் இழந்தார். காலத்திலிருந்தியாக கே. கெளதம் - எம். வுட் ஜோடி இருந்தது. இதில், கே.கெளதம் 11 பந்துகளில் 17 ரன்னும், எம்.வுட் 3 பந்துகளில் 10 ரன்னும் அடித்தனர். 20 ஓவர்களில் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
CSK Bowling: சென்னை அணியில் பந்துவீசிய வீரர்களை பொறுத்தமட்டில் மெயின் அலி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் வீசிய 4 ஓவரில் மொத்தமாக 26 ரன்கள் மட்டுமே அடிக்கவிட்டிருந்தார். தேஷ்பாண்டே 4 ஓவரில் 45 ரன்கள் அடிக்கவிட்டு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.