HBD Suryakumar Yadav: 33 வயதில் அடியெடுத்து வைக்கும் சூரியகுமார் யாதவ்; உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் சாதனை நாயகனுக்கு இன்று பிறந்தநாள்.!

வலதுகை பேட்டிங் எதிராளிகள் பந்துகளை வெளுத்து வாங்கி, குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்ட சரித்திர நாயகன் சூரியகுமார் யாதவுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

Surya Kumar Yadav With Team India (Photo Credit: Twitter)

செப்டம்பர் 14, புதுடெல்லி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) வீரர்கள் ஒவ்வொருவரும் நமது நாட்டின் வெற்றிக்காக கிரிக்கெட்டில் விளையாடினாலும், அவர்களின் திறனுக்கேற்ப ரசிகர்களை சம்பாதிக்கின்றனர்.

அந்த வகையில், இடதுகை மட்டைப்பந்தாட்டத்தில், எதிராளிகளின் பந்துகளை மைதானமெங்கும் சிதறவிடும் ஆட்டக்காரர்களில், சமீபமாக திறன்மிக்க நபராக வலம்வருபவர் சூரியகுமார் யாதவ் (Surya Kumar Yadav). இவர் மிகக்குறுகிய காலத்தில் உலகளவில் கவனிக்கப்படும் சிறந்த வீராக மாறினார். US Warns Russia & North Korea: "ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்கினால் கடும் பின்விளைவுகள்" - அமெரிக்கா உச்சகட்ட எச்சரிக்கை.! 

அவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. இன்று அவரது பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2021ல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் கலக்கிய சூரியகுமார் யாதவ், புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும் இருக்கிறார்.

மைதானத்தின் எட்டுத்திசையில் தனது பந்தை பார்வையாளர்கள் பக்கம் திருப்பிவிடும் அதிரடி ஆட்டக்காரராக இவர், ரசிகர்களால் Mr.360 என்றும் அழைக்கப்படுகிறார். அதேபோல, அவரின் பெயரை சுருக்கி SKY (Surya Kumar Yadav) எனவும் கூப்பிடுகின்றனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement