மேத்திவ் மில்லர் | கிம் ஜாங் உன்-உடன் விளாடிமிர் புதின் (Photo Credit: Wikipedia / Twitter)

செப்டம்பர் 14, வாஷிங்க்டன் டிசி (World News): வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அரசுமுறை பயணமாக ரஷியா சென்றுள்ளார். வடகொரியாவின் எல்லைகளை கொரோனா தொற்றுப்பரவலின்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் பூட்டிய வடகொரியா, தற்போது அதிபரின் ரஷிய பயணத்திற்காக திறந்தது.

வடகொரியாவின் இருந்து எல்லை வரை தனது இரயிலில் பயணம் செய்த வடகொரியா அதிபர், அதற்குப்பின் ரஷியா சென்றடைந்தார். அங்கு ரஷிய அதிகாரிகள் கிம் ஜாங் உன்னுக்கு வரவேற்பு அளித்து, அதனைத்தொடர்ந்து அவர் அதிபரை சந்திக்க அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரியா அதிபரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். இருவருக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இரவு விருந்தில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டது. Asia Cup 2023 Updates: ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகும் பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன்: பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி.!

வடகொரியா - ரஷியா அதிபர்கள் சந்திப்பு சர்வதேச அளவில் உற்றுநோக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா இதுதொடர்பான விவகாரத்தை ஏற்கனவே எச்சரித்து இருந்தது. அணுஆயுத தீவிர சோதனை காரணமாக அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பெற்று, உலகத்தில் ஒடுக்கப்பட்ட நாடுபோல வாழும் வடகொரியா அதிபர் ரஷியா சென்றுள்ளார்.

ரஷிய அதிபரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிராந்திய பாதுகாப்பு காரணமாக உக்ரைனின் ஐரோப்பிய யூனியன் சேர்க்கை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடன் வந்துவிடுமாறு கோரிக்கை வைத்தார். அவை பலனளிக்காத காரணத்தால் தன்னிடம் உக்ரைனை சரணடையச்சொல்லி போர் தொடுக்கப்பட்டது. இதனால் ரஷியாவின் மீதும் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரஷியாவின் மீது மேற்குலக மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பொருளாதார தடை விதித்தாலும், ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிபொருள் வளங்கள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதால், பொருளாதார ரீதியாக சிறிய சரிவை சந்தித்தாலும் அதனை ரஷியா மாற்று வழியில் ஈடு செய்தது. Mexican Congress Alien: 1000 ஆண்டுகள் பழமையான ஏலியனின் சடலம் கண்டெடுப்பு; மக்களுக்கு உண்மையினை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள் குழு.!

இந்நிலையில், ரஷிய - வடகொரியா அதிபர்கள் சந்திப்பை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா, உக்ரைன் போருக்கு வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கலாம் என கூறி வருகிறது. ஒருவேளை ஆயுதங்கள் வழங்கினால் கடுமையான பின்விளைவை சந்திக்க வேண்டும் எனவும் கூறி வருகிறது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்த காட்சிகள் (Photo Credit: Twitter)

வடகொரியா அதிபர் கிம் ஜான் உன் ரஷியாவில் வைத்து, "ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு எதிராக ரஷியா எடுக்கும் முயற்சிக்கு நான் ஆதரவளிக்கிறேன். என்றும் நான் ரஷியாவுடன் துணைநிற்பேன். நமது 100 ஆண்டுகால நட்புக்கு இன்றும் இலக்கணமாய் நாம் திகழ்வோம்" என தெரிவித்து இருக்கிறார்.

ஏகாதிபத்திய முறை என்று கிம் கூறியது, அமெரிக்காவின் திரைமறைவு நாடுபிடிக்கும் நடவடிக்கையை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, அமெரிக்காவின் செய்தித்தொடர்பாளர் மேத்திவ் மில்லர், வடகொரியா ரஷியாவுக்கு இராணுவ தளவாடங்களை வழங்கினால் கூடுதல் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். Actor Ashok Selvan Wedding: அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் ‘டும் டும் டும்’ முடிந்தது: சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து.!

உலகத்தால் ஒதுக்கப்பட்ட இரண்டு தலைவர்கள் சந்தித்துக்கொண்டது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. அதேபோல, வடகொரிய அதிபர் கொரோனா தொற்றுக்கு பின் முதல் முறையாக ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குறித்து சமீபத்தில் உடல்நலம் தொடர்பாக பல்வேறு செய்திகள் அமெரிக்கா மற்றும் அதன் சார்பு ஊடகங்களால் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஷியா-வடகொரியா அதிபர்கள் சந்தித்த காணொளிகளும் வெளியாகி இருக்கின்றன.