Nepal Cricketer Sandeep Lamichhane Jail Term: பாலியல் வன்கொடுமை வழக்கு... நேபாள் கிரிக்கெட் வீரர்க்கு சிறை தண்டனை..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நேபாள் கிரிக்கெட் வீரரான சந்தீப் லமிச்சனே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

Sandeep Lamichhane (Photo Credit: @OneCricketApp X)

ஜனவரி 10, நேபாள் (Sports News): நேபாள் அணியின் முன்னாள் கேப்டனும், லெக் ஸ்பின்னருமான சந்தீப், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடினார். இவர் ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 2018 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: 23 வயதான சந்தீப் லமிச்சனே (Sandeep Lamichhane) கடந்த 2022 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து 17 வயது மைனர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டப்பட்டார். இந்த புகார் கூறப்பட்டபோது இவர் வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த புகார் காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார். Sonia Gandhi Decline Ram Temple Invitation: ராமர் கோயில் திறப்பு விழா... புறக்கணித்த சோனியா காந்தி..!

நேபாள் கிரிக்கெட் வீரர்க்கு சிறை தண்டனை: இருப்பினும் பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார். இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அதில் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தீர்ப்பானது இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சந்தீப் லமிச்சனேக்கு 8 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.