Sonia Gandhi Decline Ram Temple Invitation (Photo Credit @nabilajamal_ @SouleFacts X)

ஜனவரி 03, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவிலானது ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 3 அடுக்குகளாக நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த கோவிலின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. Fan Touches KL Rahul's Feet: கே.எல் ராகுல் காலில் விழுந்து, போட்டோ எடுத்து மகிழ்ந்த ரசிகர்: வைரலாகும் வீடியோ.!

புறக்கணித்த சோனியா காந்தி: இந்நிலையில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க மூத்த தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi), மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவரும், ராமர் கோயில் விழா அழைப்பை நிராகரித்துள்ளனர். மேலும் அந்த விழாவை, ஆர்எஸ்எஸ் பாஜக நிகழ்ச்சி என்று கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து பேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆதரிக்கவில்லை என்றும். இந்த முடிவு அரசியல் ரீதியாக நடுநிலை வகிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படும். ராமர் கோயில் திறப்பு விழா ஒரு முக்கியமான மத நிகழ்வு என்பதால், அதில் பங்கேற்பதன் மூலம் ஒரு சமூகத்தின் ஆதரவைப் பெற முடியும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுளளது.