MS Dhoni Wishes Team India: "எனது பிறந்தநாளில் விலைமதிக்க முடியாத பரிசு" - இந்திய அணியின் வெற்றியை பாராட்டிய எம்.எஸ் தோனி.!
தனது பிறந்தநாளை சிறப்பிக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை 2024 போட்டியில் வெற்றி அடைந்து மிகப்பெரிய பரிசை அளித்துள்ளது.
ஜூன் 30, ராஞ்சி (Sports News): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) இறுதிப்போட்டியில், எய்டன் மார்க்கம் தலைமையிலான தென்னாபிரிக்க அணியை தோல்வியுறச்செய்துள்ள ரோகித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி, 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி டி20 உலகக்கோப்பையை (India Vs South Africa IND Vs SA) கைப்பற்றி அசத்தி இருக்கிறது. Rohit Sharma & Virat Kohli Retirement: அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த விராட் கோலி & ரோஹித் சர்மா.. வெற்றியுடன் மகிழ்ச்சியாக விடைபெறும் வீரர்கள்.!
இந்தியா அசத்தல் வெற்றியும், ரோஹித்-கோலி ஓய்வும்:
நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கனவுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தது. இதனால் இந்திய அணி ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 போட்டியில் வெற்றியடைந்து கோப்பையை தனதாக்கியது. அதனைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர்.
தோனி பாராட்டு:
இந்நிலையில், ஐசிசி ஆண்கள் டி0 உலகக் கோப்பை 2024 போட்டியில் 11 ஆண்டுகளுக்கு பின் வெற்றி அடைந்துள்ள இந்திய அணிக்கு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தல எம்.எஸ் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "2024 உலகக்கோப்பை வெற்றியாளர்கள். எனது இதயத்துடிப்பு என்பது அதிகரித்தபோது, அமைதியாக இருந்து தன்னம்பிக்கையுடன் நீங்கள் செய்ததை சிறப்பாக செய்து வெற்றி அடைந்துள்ளீர்கள். உலகக்கோப்பையை நம் மண்ணுக்கு, இந்திய மண்ணுக்கு உரிதாக்கிய உங்களுக்கு, உலகில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் இருந்தும் நன்றி. எனது வாழ்த்துக்கள். எனது பிறந்தநாளில் விலைமதிப்பில்லாத இப்பரிசை கொடுத்த உங்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
தோனி இன்ஸ்டாகிராம் பதிவு: